முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுவாச பிரச்னையால் மக்கள் கடும் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      இந்தியா
Delhi 2024-10-28

Source: provided

புதுடெல்லி : டெல்லியின் ஆனந்த் விஹாரில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு உடல்நிலை பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் நாளுக்குநாள் காற்று மாசு மோசமான நிலைக்கு மாறிவருவது மக்கள் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது. வானிலை நிபுணர்களின் கூற்றுப்படி, வெப்பநிலை சரிவுடன், நகரத்டெல் காற்றழுத்தம் குறைவாக உள்ளதால், மாசு அளவு அதிகரித்து வருகிறது. இதற்கு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் அறுவடைக்குப்பின்னர் விவசாய நிலங்களில் மீதமுள்ள கழிவுகளை எரிப்பதால் தலைநகரில் காற்று மாசு அதிகரித்துள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு புகையால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. காற்றின் தரக் குறியீடு எண் 300-க்கும் மேல் அதிகரித்து மிக மோசமான நிலையை எட்டியது. இதனால் மக்கள் ஆஸ்துமா, சுவாசப்பிரச்னை, தலைவலி, கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் தொடர்பான நோய், ஆஸ்துமா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி 389ஆக இருந்தது, அதே நேரத்டெல் ஆனந்த் விஹாரில் 419ஆக இருந்தது. இந்த நிலையில், ஆனந்த் விஹாரில் வசிக்கும் பலர் குடியிருப்புகளைக் காலிசெய்துவிட்டு வேறு இடத்திற்கு மாறுதலாகியும் செல்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து