முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      உலகம்
France 2024-09-15

Source: provided

பாரிஸ் : பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.  

ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். இவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு முயற்சித்து வருகிறது. சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டா நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையிலும் இங்கிலாந்து அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பிரான்சில் இருந்து கடல் வழியாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். பிரான்ஸ் - இங்கிலாந்து இடையேயான கடல் பகுதியில் இங்கிலீஷ் சேனல் வழியாக படகில் இங்கிலாந்திற்குள் நுழைய அகதிகள் நேற்று முன்தினம் முயற்சித்தனர். 

அப்போது, அவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அகதிகள் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.  நடப்பு ஆண்டில் மட்டும் பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்குள் கடல்வழியாக சட்டவிரோதமாக நுழைய முயன்று ஏற்கனவே 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து