முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      இந்தியா
Kolkata 2024-11-09

Source: provided

கொல்கத்தா : செகந்திராபாத் - ஷாலிமார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் மேற்கு வங்கத்தின் ஹவுரா அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

செகந்திராபாத் - ஷாலிமார் வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கரக்பூர் பிரிவில் உள்ள நல்பூர் ரயில் நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்த போது நேற்று அதிகாலை 5.30 மணியளவில் 3 ​​பெட்டிகள் தடம் புரண்டதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே இந்த விபத்து நேரிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 

கொல்கத்தாவில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள நல்பூரில் வாராந்திர சிறப்பு ரயில் தடம் புரண்டது. தடம் புரண்ட பெட்டிகளில் 2 பயணிகள் கோச்சும், ஒரு பார்சல் வேனும் இருந்தது. விபத்தில் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை. பயணிகள் தங்கள் பயணத்தை தொடர 10 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தென் கிழக்கு ரயில்வே அதிகாரி ஓம் பிரகாஷ் சரண் தெரிவித்துள்ளார்.

விபத்தை அடுத்து, விபத்து நிவாரண ரயில் மற்றும் மருத்துவ நிவாரண ரயில்கள் சந்த்ராகாச்சி மற்றும் காரக்பூரில் இருந்து உதவிக்காக உடனடியாக அனுப்பப்பட்ட நிலையில், தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளை கொல்கத்தாவிற்கு ஏற்றிச் செல்ல பேருந்துகளும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விபத்து தொடர்பான உதவி எண்களை ரயில்வே அறிவித்துள்ளது. தேவைப்படுவோர் காரக்பூர் - 63764 மற்றும் 032229-3764 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து