முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      இந்தியா
Jharkhand 2024-11-09

Source: provided

ராஞ்சி : சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ஜார்க்கண்ட்டில் வரி ஏய்ப்புத் தொடர்பாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளர் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். 

ராஞ்சி மற்றும் ஜம்ஷெட்பூரில் மொத்த ஒன்பது இடங்களில் நேற்று  காலையில் இந்த சோதனை தொடங்கி நடந்தது. சி.ஆர்.பி.எப். குழுவின் பாதுகாப்புடன் வருமானவரித் துறையினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் சுனில் ஸ்ரீவஸ்தவா தொடர்புடைய இடங்களிலும் இந்தச் சோதனைகள் நடந்தது. மாநிலத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் சுரங்க முறைகேடு தொடர்பாக சமீபத்தில் அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வு முகமை (சி.பி.ஐ.) தொடர்ந்த விசாரணையுடன் இந்த சோதனை தொடர்புடையது என்று இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த வருமானவரிச் சோதனை குறித்து மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகேஷ் சின்ஹா கூறுகையில், 

ஜார்க்கண்டுக்கு இது ஒன்றும் புதிதில்லை. மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் ஊழியர்களின் வீடுகளில் அடிக்கடி வருமான வரிச்சோதனைகள் நடத்தப்படுகின்றன. தேர்தலுக்கு முன்பாக வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனைகள் மூலமாக பா.ஜ.க. இங்கு கால்பதிக்க நினைக்கிறது. இத்தகைய செயல்கள் மூலம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கின்றனர் என்று தெரிவித்தார்.

இதனிடையே பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதியோ கூறுகையில், மாநிலத்தில் ஆளுங்கட்சிகள் இந்தச் சோதனைகளை தேர்தலுடன் இணைத்துப் போசுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. வருமான வரித் துறையின் அதிகாரபூர்வ அறிக்கை வரும் வரை அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து