முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி மொழியில் மருத்துவ படிப்பு கற்றுத் தரப்படும் : சத்தீஸ்கர் முதல்வர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      இந்தியா
Vishnu-Deo-Sai 2023-12-10

Source: provided

ராய்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தி மொழியில் மருத்துவப் படிப்பான எம்.பி.பி.எஸ்., கற்றுத்தரப்படும் என்று அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறி உள்ளார்.

இந்தியாவில் அலுவல் மொழியாக இந்தி ஏற்கப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோசாய் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; 

2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இந்தியில் மருத்துவக் கல்வியை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பத்தை தெரிவித்து இருந்தார். அவரது லட்சியத்தை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி. இந்தி திவாஸ் எனப்படும் இந்தி தினத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

நடப்பு கல்வியாண்டு முதல் எம்.பி.பி.எஸ்., படிப்பு இந்தி மொழியில் கற்றுத் தரப்படும். அதற்கு என பிரத்யேக பாடப் புத்தகங்கள் வெளியிடப்படும். ஆங்கிலேய கல்வி முறையில் இருந்து மாற்றும் முயற்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.   

இந்தி வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு இத்தகைய நடவடிக்கை பயன் உள்ளதாக இருக்கும். இந்தியில் படிப்பதன் மூலம் ஆழமான புரிதலை வளர்த்து, நல்ல மருத்துவர்களாக அவர்கள் மேம்படுத்த உதவும்.  இவ்வாறு விஷ்ணு தியோசாய் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து