முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறக்குமதி வரி உயர்வு எதிரொலி: சமையல் எண்ணெய் மற்றும் பாமாயில் விலை திடீர் உயர்வு

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      தமிழகம்
Oil-imports 2024-03-10

சென்னை, எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளியை போல எண்ணெய் விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. அனைத்து சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், தீப எண்ணெய் வகைகள் திடீரென உயர்ந்துள்ளன. எண்ணெய் மார்க்கெட்டில் தினசரி நிர்ணயிக்கப்படும் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்துள்ளது. பாமாயில் ஒரு லிட்டருக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் மளிகை கடைகளில் தற்போது ரூ.110 வரை விற்கப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவை லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது. சில்லரை வியபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் எண்ணெய் ஆர்டர் கொடுக் கும் போது விலையேற்றத்தை கூறியதோடு மட்டுமின்றி இன்னும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.மளிகைக் கடைகளில் உயர்த்தப்பட்ட திடீர் எண்ணெய் விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனம் தரப்பில் கூறும்போது, இறக்குமதி வரியின் காரணமாக எல்லா எண்ணெய் வகைகளும் உயந்துள்ளன. பாமாயில் விலை 10 பாக்கெட்டுகள் கொண்ட பெட்டிக்கு ரூ.100 உயர்ந்தது. தீப எண்ணெய் பெட்டி ரூ.1035-ல் இருந்து ரூ.1230 ஆக உயர்ந்தது என்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து