முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்களுக்கு மொட்டை: இலங்கை அரசின் செயலுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      தமிழகம்
OPS 2023-10-25

சென்னை, தமிழக மீனவர்களுக்கு மொட்டை போட்ட இலங்கை அரசின் கொடூர செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்களை சிறைபிடிப்பதையும், அவர்களுடைய படகுகளை பிடித்து வைத்துக் கொண்டு திருப்பித் தராமல் இருப்பதையும், கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பதையும், மீன்பிடி வலைகளை கிழித்தெறிவதையும், தமிழக மீனவர்களை துன்புறுத்துவதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில், அண்மையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்ததாகவும், இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், மூன்று மீனவர்கள் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டதால் அவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளதாகவும், மீதமுள்ள ஐந்து மீனவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதம், அதைச் செலுத்த தவறினால் ஆறு மாத சிறை தண்டளை விதித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

அபராதத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு சிறையில் இருந்த ஐந்து தமிழக மீனவர்களை மொட்டையடிக்க கட்டாயப்படுத்தியதாகவும், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாகவும், குப்பைகளை அள்ளச் சொல்லி வலியுறுத்தியதாகவும், தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். ஐந்து மீனவர்களும் மொட்டையடிக்கப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு திரும்பியுள்ளனர். மேலும், தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற தமிழக மீனவர்களை இலங்கை அரசு மிக மோசமாக நடத்துவதாக தாயகம் திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளக்கூடாது என்ற தீய நோக்கத்துடனும், தமிழக மீனவர்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தும் எண்ணத்துடனும் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.

இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற கொடூர செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏழை மீனவர்களின் எதிர்காலத்தையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதற்குத் தேவையான அழுத்தத்தை முதல்வர் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்டிக் குழுவின் சார்பில் வலிபுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து