முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      விளையாட்டு
Bumra 2024-03-20

Source: provided

துபாய் : வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வங்கதேசம் சரிவை சந்தித்துள்ளது.

515 ரன்கள் இலக்கு...

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்னும், வங்காளதேசம் 149 ரன்னும் எடுத்தன. தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து வங்காளதேசத்திற்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

முதல் இடத்தில்... 

இந்த இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேசம், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் வங்காளதேசம் 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா (71.67 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது. தோல்வி கண்ட வங்காளதேசம் (39.29 சதவீதம்) 4வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு சரிந்துள்ளது.

6-வது இடத்தில்...

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2வது இடத்திலும், நியூசிலாந்து (50.00 சதவீதம்) 3வது இடத்திலும் நீடிக்கின்றன. வங்காளதேசத்தின் சரிவால் இலங்கை (42.86 சதவீதம்) 4வது இடத்திற்கும், இங்கிலாந்து (42.19 சதவீதம்) 5வது இடத்திற்கும் முன்னேறி உள்ளன. இந்தப்பட்டியலில் 7 முதல் 9 இடங்களில் தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்), பாகிஸ்தான் (19.05 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து