முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      தமிழகம்
CM-3 2024-03-24

Source: provided

சென்னை : கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்துடன் கூடிய கொளத்தூர் மக்கள் சேவை மையம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 4 கோடியே 75 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக் கட்டிடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம், நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், முத்துகுமரப்பா தெருவில் 13 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்துடன் கூடிய கொளத்தூர் மக்கள் சேவை மையம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜி.கே.எம். காலனி 12-வது தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சிங்கார சென்னை 2.0 நிதியின் கீழ் 2 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் தளம். நாடாளுமன்ற உறுப்பினர்  வில்சனின்  நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டாம் தளம், என மொத்தம் 4 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம்,

மதுரை சாமி மடத்தில் 26 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவில் நவீன உடற்பயிற்சி உபகரணங்கள், கழிவறைகள். பொருட்கள் வைக்கும் அறை உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட உடற்பயிற்சிக்கூடம், நேர்மை நகர் மயான பூமியில் 26 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீத்தார் நினைவு மண்டபம் என மொத்தம் 4 கோடியே 75 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

முன்னதாக கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர்  பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு புத்தகப் பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.

கொளத்தூர், முத்துகுமரப்பா தெருவில் 13 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 40,300 சதுர அடி பரப்பளவில் உணவு அருந்தும் இடம், திருமண நிகழ்வு கூடம். ஓய்வறை, வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகளுடன் மூன்று தளங்கள் கொண்ட சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்துடன் கூடிய கொளத்தூர் மக்கள் சேவை மையம் கட்டப்படவுள்ள இடத்தினை பார்வையிடுதல் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறைக்கு சொந்தமான 0.74 ஏக்கர் இடத்தில் புதியதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பகிர்ந்த பணியிடம் மற்றும் வணிக வளாகங்கள் என 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் 4 தளங்களுடன் கூடிய மக்கள் சேவை மையம் கட்டப்படவுள்ள இடத்தினை முதல்வர் பார்வையிட்டார்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முதல்வர், கொளத்தூர் பகுதிக்கான அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, தொகுதி மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மூத்த முன்னோடி ஏகப்பன் உள்ளிட்ட 443 நிர்வாகிகளுக்கு முதல்வர் சிறப்பு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு,  பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள்  பி.வில்சன், கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ்குமார்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து