முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிஸ்புல்லா தொடர் தாக்குதல்: இஸ்ரேலில் வசிக்கும் இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் அச்சம்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      உலகம்
Israel-2024-10-03

டெல் அவிவ், ஹிஸ்புல்லா தொடர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் வசிக்கும் இந்திய மாணவர்கள் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் முன்தினம் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் ராணுவம் இரவு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. மொத்தம் 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் பலர் வசிக்கிறார்கள். மாணவர்கள் சிலர் மருத்துவம் படித்து வருகிறார்கள்.  அங்கு வசிப்பவர்களில் பலர் ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவருமே இந்த ஏவுகணை தாக்குதலை கண்டு அச்சம் அடைந்துள்ளனர். ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை வெளியிட்டு தங்களின் உறவினர்களுடன் அவர்கள் உருக்கமாக பேசியுள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலால் நாளுக்கு நாள் எங்களிடையே பயம் அதிகரித்து வருகிறது. இங்கு நிலைமை மோசமாக உள்ளது. இதுபோன்ற தாக்குதலை நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. டெல் அவிவ் நகருக்குள் ஏவுகணைகள் வந்து விழும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து