முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்வளத்துறை சார்பில் ரூ.83 கோடி செலவில் 19 திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1 2024-10-04

Source: provided

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் 83 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், புனரமைக்கப்பட்ட வாய்க்கால்கள், அணைமறுகட்டுமானப் பணி, புதிய குளம், புதிய அலுவலகக் கட்டிடம் உள்ளிட்ட 19 நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.

திருப்பூர், தாராபுரம் வட்டம், கவுண்டையன்வலசு கிராமம் அருகில் அமராவதி ஆற்றின் குறுக்கே 11 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, மாம்பாடி-புங்கந்துறை கிராமம் அமராவதி ஆற்றில் 11 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, குன்றத்தூர், கொளப்பாக்கம் கிராமத்தில், கொளப்பாக்கம் கால்வாய் 1 முதல் கொளப்பாக்கம் பொழிச்சலூர் சாலையில் இணைப்பு ஓடை வரை 11 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூடிய வடிவிலான கால்வாய், வாலாஜாபாத், உள்ளாவூர் கிராமத்தின் அருகே தொள்ளாழி மடுவின் குறுக்கே 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டை திறந்து வைத்தார்.

உத்திரமேரூர் வட்டம், இருமரம் கிராமத்தின் அருகே புத்தளிமடுவின் குறுக்கே 3 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, திசையன்விளை, கஸ்தூரிரெங்கபுரம் கிராமம் பகுதி 2-ல் 4 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வெள்ள நீர் சூழ்வதை தடுக்கும் வகையில் திருப்பணி கரிசல்குளம் வெள்ள நீரை 3 கோடியே 79 லட்சம் செலவில் முடிவுற்ற நெடுங்குளம், மேகமுடையார் குளம் வழியாக சத்திரம் புதுக்குளம் கண்மாய்க்கு திருப்பும் பணியை திறந்து வைத்தார்.

ஒட்டப்பிடாரம், வடக்கு கல்மேடு கண்மாயில் 1 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி, தூத்துக்குடி, பேரூரணி அணைக்கட்டில் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி, தூத்துக்குடி, திரு வைகுண்டம், சம்பன்குளம் ஏரியின் வழங்கு வாய்க்காலின் இடது கரையில் 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் பணிகள், திருச்சி மாவட்டத்தில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கோட்ட தலைமையிட உப கோட்டத்துடன் புதிய அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து