முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெராயின், துப்பாக்கி கடத்திய பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      இந்தியா
Drones 2023 06 28

Source: provided

சண்டிகர் : பஞ்சாபின் பெரோஸ்பூரில், ஹெராயின், கைத்துப்பாக்கிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பஞ்சாபின் பெரோஸ்பூரில், பாகிஸ்தானுக்கு சொந்தமான, டிரோன் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த பாதுகாப்பு படையினர் டிரோனை சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்து 500 கிராம் ஹெராயின் மற்றும் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சுட்டுவீழ்த்தப்பட்ட டிரோன், ஹெராயின் மற்றும் கைத்துப்பாக்கி படத்தை பாதுகாப்பு படையினர் வலைதளத்தில் பகிர்ந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட DJI Mavic 3 கிளாசிக் ரக டிரோனை பி.எஸ்.எப்., வீரர்கள் தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தினர்  என குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக, பஞ்சாபில் பல பாகிஸ்தான் டிரோன்களை பி.எஸ்.எப்., படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். மார்ச் மாதம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இரண்டு டிரோன்களை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்தனர். பிப்ரவரி மாதம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து