முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் இந்திய அணியில் ஆஸி.,க்கு எதிரான தொடரில் இணைகிறார் முகமது ஷமி

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      விளையாட்டு
Mohammed Shami-2023-12-07

Source: provided

புதுடெல்லி : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறவில்லை என்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்  இந்திய அணியில் அவர் இடம்பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுப்பயணம்... 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 16ம் தேதி முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் போட்டிகள் முறையே பெங்களூரு, புனே, மும்பையில் நடைபெற உள்ளன. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை கேப்டன்...

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் இன்றி களம் கண்ட இந்தியா இந்த தொடருக்கு ஜஸ்ப்ரீத் பும்ராவை துணை கேப்டனாக நியமித்துள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் முகமது ஷமி இந்த தொடருக்கான அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தொடரிலும் அவர் இடம் பெறவில்லை.

தேவை இல்லை...

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஷமி ஏன் இடம் பெறவில்லை? என்பதற்கான காரணம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நடைபெறுவதால் முகமது ஷமியின் தேவை அதிகம் இருக்காது.

ஆஸி.க்கு பயணம்...

அதே போன்று நியூசிலாந்து தொடருக்கு அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. அதுபோன்ற பெரிய தொடரில் முகமது ஷமி போன்ற அனுபவ வீரர் அவசியம் என்பதனாலே நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஷமி இடம் பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து