முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      இந்தியா
Gujarat 2024-10-14

Source: provided

புதுடெல்லி: டெல்லி போலீசார் மற்றும் குஜராத் போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

போதை பொருட்களுக்கு எதிரான பூஜ்ய சகிப்புதன்மை கொள்கை அடிப்படையில் போலீசார் கூட்டாக இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்படி, அங்லேஷ்வர் பகுதியில் உள்ள ஆவ்கார் என்ற மருந்து நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 518 கிலோ எடை கொண்ட கொக்கைன் என்ற போதை பொருள் நேற்று கைப்பற்றப்பட்டது.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது. கடந்த 1-ந்தேதி மஹிபால்பூர் பகுதியில், துஷார் கோயல் என்பவரின் குடோனில் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர் சோதனை நடத்தியதில், 562 கிலோ எடை கொண்ட கொக்கைன் மற்றும் 40 கிலோ எடை கொண்ட ஹைடிரோபோனிக் மரிஜுவானா ஆகிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதுபற்றிய விசாரணையின் தொடர்ச்சியாக, டெல்லி ரமேஷ் நகரில் உள்ள கடை ஒன்றில் இருந்து, கடந்த 10-ந்தேதி 208 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான மொத்தம் 1,289 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதை பொருள் மற்றும் 40 கிலோ எடை கொண்ட ஹைடிரோபோனிக் தாய்லாந்து மரிஜுவானா ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளது. இதனால், கடந்த 2 வாரத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து