முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் பயங்கரம்: சிறுத்தை தாக்கி சிறுமி பலி

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      தமிழகம்
Puli 2023-12-29

Source: provided

கோவை : கோவையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்தார். தாயின் கண்முன்னே நடந்த இந்த சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அணுல் அன்சாரி. இவர் கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அணுல் அன்சாரியின் மகள் அப்சரா. 6 வயதான சிறுமி, அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தனது தாயுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கே பதுங்கி இருந்த சிறுத்தை, திடீரென சிறுமி அப்சராவை கடித்து இழுத்துச்சென்றது. இதைக்கண்டு சிறுமியின் தாய் அதிர்ச்சியில் உறைந்துபோனார். சிறுத்தை கடித்ததில் சிறுமி அப்சரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த காவல் மற்றும் வனத்துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து