எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: மாணவி வன்கொடுமை வழக்கில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்.
சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் (37) என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஞானசேகரன் கைதை தொடர்ந்து இந்த பாலியல் குற்ற செயலில் ஈடுப்பட்ட மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பு எற்படுத்தி இருந்தது. இதில் மாணவியின் பெயர், அவரது முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்கள் மறைக்கப்படாமல் சமூக வலைதளங்களில் அப்படியே வெளியிடப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதனைத்தொடர்ந்து பாதிகப்பட்ட மாணவியின் விவரங்களை யாரும் பார்க்கவும் பதிவிறக்கவும் செய்ய முடியாதபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்த புகைப்படமோ, எப்.ஐஆர். நகலையோ இணையதளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் எக்ஸ் வலைத்தள பக்கத்தில், "சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த கொடூரமான செயலை ஆணையம் கடுமையாக கண்டிக்கிறது மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் உடன் நிற்கும்.
பாதிக்கப்பட்டவருக்கு இலவச மருத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை 2023-இன் பிரிவு 71ஐ எப்.ஐ.ஆரில் சேர்க்கவும். அத்துடன், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்காக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பழைய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. எனவே, அவர் மீது வழக்கு இருந்தும் தமிழ்நாடு காவல்துறை முந்தைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. இந்த அலட்சியம் அவரை இதுபோன்ற குற்றங்களை செய்யத் தூண்டியது, இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றிய தீவிர கவலையை எழுப்புகிறது என்றும் அதில் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீமதி. விஜய ரகத்கர் தமிழக காவல்துறைக்கு இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடதக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
13 Jan 2025சென்னை : சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகளை முரசு கொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
100 நாள் வேலை திட்டத்தில் 2 மாதத்திற்கான ரூ.1,056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2025சென்னை : தமிழகத்தில் 100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 மாதத்திற்கான ரூ.1056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
-
திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கும் கவுண்டரில் தீ : பக்தர்கள் கடும் அதிர்ச்சி
13 Jan 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விநியோக மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
வண்டலூர் பூங்காவில் பொங்கல் சிறப்பு ஏற்பாடுகள் புகையிலை, மதுபானம் போன்ற பொருட்களுக்கு தடை
13 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
பிரட்டனில் 166 மி. ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு
13 Jan 2025லண்டன் : பிரிட்டனில் சுமார் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான 200 டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
13 Jan 2025சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
காட்டுத் தீயிலிருந்து வீடுகளை பாதுகாக்க மணிக்கு ரூ.1.7 லட்சம் செலவு
13 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க, லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.7 லட்சம் வரை செலவிடுவதாக தகவல
-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
13 Jan 2025மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வகையில், ஒரே நாளில் 57 காசுகள் சரிந்து ரூ.86. 61 காசுகளுக்கு வணிகமானது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஆஸி., தென் ஆப்பிரிக்கா, ஆப்கன் அணிகள் அறிவிப்பு
13 Jan 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.
-
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய செயலாளர், பொருளாளர்
13 Jan 2025மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார்
-
கேந்திரிய வித்யாலயாவில் தேர்வு தேதிகள் மாற்றம்
13 Jan 2025சென்னை : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
-
எல்லையை கடக்க முயற்சி: பாகிஸ்தானியர் கைது
13 Jan 2025காந்தி நகர் : குஜராத்தின் கட்சு மாவட்டத்தில் இருநாட்டு எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.&
-
உ.பி. மகா கும்பமேளாவில் காணாமல் போன 250 பேர் குடும்பத்தினருடன் சேர்ப்பு
13 Jan 2025பிரயாக்ராஜ் : மகா கும்பமேளா கூட்டத்தில், குடும்பத்திலிருந்து தொலைந்துபோன 250 பேர், கும்பமேளா நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் மீண்டும் குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டன
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஓரிரு நாளில் இந்திய அணி அறிவிப்பு
13 Jan 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய் பொங்கல் தின வாழ்த்து
13 Jan 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
கேப்டனாக ஸ்ரேயாஸ் நியமனம்
13 Jan 202518வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
37 மாவட்டங்களில் சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
13 Jan 2025சென்னை : 37 மாவட்டங்களில் 746 சாலைகள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
முன்னாள் வீரர் கபில்தேவ் குறித்து யுவராஜ் சிங்கின் தந்தை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
13 Jan 2025மும்பை : முன்னாள் வீரர் கபில்தேவ் குறித்து யுவராஜ் சிங்கின் தந்தை பகிர்ந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான...