முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டனாக ஸ்ரேயாஸ் நியமனம்

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      விளையாட்டு
Shreyas -Ishaan-Kishan

Source: provided

18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்குகிறது.  இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஸ்ரேயஸ் ஐயரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 2வது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். தற்போது அவர் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

_____________________________________________________________________________________

விஜய் ஹசாரே அரையிறுதி சுற்று 

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 32-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதன் பிளே ஆப் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் அரியானா, கர்நாடகா, விதர்பா மற்றும் மராட்டியம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதி சுற்று வரும் 15-ம் தேதி வதோதரா மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் அரியானா மற்றும் பஞ்சாப் அணிகள் வரும் 15-ம் தேதியும்,இரண்டாவது அரையிறுதி போட்டியில் மராட்டியம் மற்றும் விதர்பா அணிகள் வரும் 16-ம் தேதியும்  மோதுகின்றன.       

_____________________________________________________________________________________

நாதன் மெக்ஸ்வீனி உறுதி

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள நாதன் மெக்ஸ்வீனி, ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கும் இலங்கையில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய மண்ணில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கு பயிற்சி பெற்றுள்ளேன். அந்த பயிற்சி இதுவரையிலான ஷீல்டு போட்டிகளில் எனக்கு கைகொடுத்துள்ளது. ஆனால், இலங்கையில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கு நான் பழகிக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதற்கும், இலங்கையில் எதிர்கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

மிகவும் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான மிட்ச் ஸ்வெப்சன் மற்றும் மாட் குன்ஹிமேனுடன் குயின்லாந்தில் வளர்ந்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். நான் அதிக அளவிலான சுழற்பந்துவீச்சினை எதிர்கொண்டுள்ளேன். அதுவும் தரமான சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடியுள்ளேன். இந்த அனுபவங்களை இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த முறை எனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து