முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரியில் 5-வது நாளாக தொடர்ந்த கடல் சீற்றம் படகு போக்குவரத்து ரத்து - பயணிகள் ஏமாற்றம்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      தமிழகம்
kumari 2025-01-04

Source: provided

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 5-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதால் படகு போககுவரத்தும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் அமாவாசையையொட்டி நேற்று 5-வது நாளாக சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் நீடித்தது. இதனால் வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் சீற்றமாக காணப்படுகிறது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் நேற்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் தடையை மீறி கடலில் இறங்குபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்கக்கடல் பகுதி மற்ற கடல் பகுதியை விட அதிகமான அளவில் சீற்றமாக இருந்தது. இதனால் நேற்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சகஜ நிலைக்கு திரும்பியபிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனால் படகு குழாமில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதே போல திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து