தின பூமி
Idhayam Matrimony

தலைக்கவசம் அணியாத காவலர்கள் இடைநீக்கம்: டி.ஜி.பி. உத்தரவு

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      தமிழகம்
Shankar-Jiwal 2023 06 24

Source: provided

சென்னை : தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. தலைக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து காவலர்கள் ரூ. 1,000 அபராதம் விதிக்கின்றனர். தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் காவலர்களிடம் பிடிபடுபவரின் வாகன ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அபராதம் விதிக்கும் காவலர்களே தலைக்கவசம் அணியாமல் செல்வதாக புகார் எழுந்துள்ளது.  இந்த நிலையில், தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய அனைத்து மாநகர ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காவல் நிலையங்களில் நாள்தோறும் காலை நடைபெறும் வருகைபதிவு கூட்டத்தில், இருசக்கர வாகனத்தில் வரும் காவலர்கள், மேல் அதிகாரியிடம் தலைக்கவசத்தை காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து