முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதம் விரைவில் முடிவுக்கு வரும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      இந்தியா
Yogi 2023-12-30

கான்பூர், பயங்கரவாதம் அதன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது; அது விரைவில் முடிவுக்கு வரும்; பிரதமர் மோடியின் தலைமையை நாடு நம்ப வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட கான்பூரைச் சேர்ந்த 31 வயது சுபம் திவேதியின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சுபம் திவேதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஒரு கொடூரமான செயல். அப்பாவி மக்களை அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில், அவர்களின் குடும்பங்கள் முன்னிலையில் சுட்டுக்கொன்றது சகிக்க முடியாதது.

கொலை செய்வதற்கு முன் அவர்களின் மதத்தைக் கேட்பது, பெண்களை விதவைகளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பயங்கரவாதத்திற்கு சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக இருக்கும். துக்ககரமான இந்த நேரத்தில், நாடு பிரதமர் மோடியின் தலைமையை நம்ப வேண்டும். இது பயங்கரவாதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும் அரசு அல்ல; வாக்கு வங்கியைப் பார்க்கும் அரசும் அல்ல. பயங்கரவாதிகளின் கொடிய, விஷப் பற்களை நசுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

பயங்கரவாதிகளும் அவர்களை ஆதரித்தவர்களும் இப்போது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இப்போது அடுத்து என்ன நடக்கும் என்பதை அனைவரும் கவனிப்பார்கள். சுபம் திவேதிக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து