முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கராச்சி கடற்கரை பகுதியில் பாக்., ஏவுகணை சோதனை

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      உலகம்
Pak 2023-11-03

இஸ்லமாபாத், கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த  பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி 'மினி சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ளது. பாகிஸ்தான் தூதரகத்திற்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ள நிலையில்,கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து