முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி முதல் தொடங்குகிறது

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      தமிழகம்
sun-2023-05-01

Source: provided

சென்னை: அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி முதல் தொடங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வெய்யில் மாதங்களான மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கும். அதிலும் கத்திரி வெய்யில் என்னும் அக்னி நட்சத்திரம் நெருப்பை அள்ளி தலையில் கொட்டுவது போன்று வெய்யில் பிளந்து எடுக்கும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிப்ரவரி முதலே வெய்யில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட இந்தாண்டு அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ஒருசில இடங்களில் வெய்யில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு கூடுதலாக வெப்பநிலை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நம்மைக் குளிர்விக்கக் கோடை மழையும் அவ்வப்போது தலைகாட்டிச் சென்றாலும், அடுத்த நாளே வழக்கம்போல் வெய்யில் கொளுத்தத் தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே தமிழகத்தில் பல இடங்களில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வாினிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தாண்டின் கத்தரி வெய்யில் எனும் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை நீடிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட வெய்யில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கில நாள்களின்படி கிட்டத்தட்ட மே மாதம் முழுவதுமே இந்தாண்டு கத்தரி வெய்யில் கொளுத்தப்போகிறது.

கோடை வெப்பத்திலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள அதிகப்படியான தண்ணீர் அருந்துவதும், உடல் அதிக சூடு ஆகாமலும் பார்த்துக்கொள்ளவும். இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். வெளியில் செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள். முக்கியமாக அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து