முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      தமிழகம்
Central-government 2021 12-

Source: provided

சென்னை: பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதல் நாடு முழுவதுமே கண்டனங்கள் எழுந்துள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானியர்கள் அட்டாரி- வாகா எல்லை வழியாக இந்தியாவைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தவும் பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தொழில், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழகத்திற்கு வந்துள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானியர்களை நாளைக்குள் தமிழகத்தை விட்டு வெளியேற்றும் பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து