முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மா புதிய சாதனை

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மல்லுக்கட்டின.  இந்த ஆட்டத்தில் அடித்த 70 ரன்களையும் சேர்த்து ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 13, 208 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

ஒட்டு மொத்தத்தில் இந்த சாதனையை படைத்த 8-வது வீரர் ரோகித் சர்மா ஆவார். அந்த பட்டியல்: 1. கிறிஸ் கெயில் - 14,562 ரன்கள், 2. அலேக்ஸ் ஹெல்ஸ் - 13,610 ரன்கள்,3. சோயப் மாலிக் - 13,571 ரன்கள், 4. பொல்லார்டு - 13,537 ரன்கள், 5. விராட் கோலி - 13,208 ரன்கள், 6. டேவிட் வார்னர் - 13,019 ரன்கள், 7. பட்லர் - 12,469 ரன்கள்,  8. ரோகித் சர்மா - 12,058 ரன்கள்.

சூர்யகுமார் யாதவ் விருப்பம்

ஐதராபாத்தில் அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 146 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 70 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் அடித்தனர். 9-வது லீக் ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலிலும் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், "எனது மனைவி இந்த ஆட்டத்தை பார்க்க மும்பையிலிருந்து இங்கு (ஐதராபாத்) வந்துள்ளார். அதை விட எனக்கு வேறு என்ன வேண்டும். அவர் இங்கே இருந்ததால் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதால் அதை தொடர்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். தொடர்ச்சியாக 4 போட்டிகளை வென்றது மிகச்சிறப்பான உணர்வை கொடுக்கிறது. ரோகித் அற்புதமாக பேட்டிங் செய்தார் என்று கூறினார். 

அழைப்பை நிராகரித்த பாக். வீரர்

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.  

இந்த தொடரில் பங்கேற்க 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் நீரஜ் சோப்ராவின் அழைப்பை அர்ஷத் நதீம் நிராகரித்துள்ளார். வரும் மே 22-ம் தேதி தென் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளதால் தன்னால் கலந்துகொள்ள முடியாது என்று அர்ஷத் நதீம் விளக்கமளித்துள்ளார். 

வீரேந்திர சேவாக் கடும் விமர்சனம்

மும்பைக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அவுட் ஆனது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இஷான் கிஷன் 1 ரன் அடித்திருந்தபோது வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிக்கெல்டனிடம் கேட்ச் முறையில் வெளியேறினார். அதாவது பந்து லெக்சைடில் அவரது பேட்டை உரசுவது போல் சென்றது. ஆனால் விக்கெட் கீப்பரோ, மும்பை வீரர்களோ யாரும் அப்பீல் செய்யவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடுவர் அவுட் என்று விரலை உயர்த்தினார். அதற்கு இஷான் கிஷனும் கேட்ச் ஆனதாக நினைத்து பெவிலியன் நோக்கி நடந்தார். ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெரியவந்தது. கள நடுவர் மற்றும் இஷான் கிஷனின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும். அது மூளை மங்கிப்போனதைத்தான் குறிக்கிறது. இஷான் கிஷன் குறைந்த பட்சம் நடுவர் தனது முடிவை எடுக்கும் வரை காத்திருக்கலாம். நடுவரை அவரது வேலையை செய்ய விடுங்கள். அதற்காக அவர் பணமும் வாங்குகிறார். இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்து பேட்டில் பட்டிருந்தால் கூட அது புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் அது அவுட்டும் இல்லை, நடுவரும் உறுதியற்றவராக இருந்தார். ஆனால் திடீரென இஷான் ஆடுகளத்தை விட்டு வெளியேறியது குழப்பமானது" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து