முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேச பாதுகாப்புக்காக ஒட்டுக் கேட்பதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடில்லி : நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக தேசவிரோதிகளின் செல்போன்களை  கண்காணிப்பதில் எந்த தவறுமே இல்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உளவு பார்க்க பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தியது தொடர்பான புகார் மனுக்களை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் அமர்வு நேற்று விசாரித்தது. விசாரணையின் போது பேசிய நீதிபதிகள், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக தேசவிரோதிகளின் செல்போன்களை பெகாசஸ் மூலம் கண்காணிப்பதில் என்ன தவறு உள்ளது? அதில் எந்த தவறுமே இல்லை. தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது. அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி. தனிநபர்களுக்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டால் அப்போது இந்த புகாரை பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனர். 

இதற்கிடையில் விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஷ்யாம் திவான், தினேஷ் திவேதி ஆகியோர், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையிலான பெகாசஸ் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை வெளியிட வலியுறுத்தினர். ஆனால் இதை மறுத்த நீதிபதிகள், தேசப்பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் அறிக்கையில் இடம் பெற்றிருந்தால் அதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என்று கோரிக்கையை நிராகரித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து