முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவு அதிபர் வாஹித் பதவி விலக நஷீத் கோரிக்கை

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

மாலே, அக்.22 - மாலத் தீவில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த இயலாத அதிபர் வாஹித் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் அதிபர் நஷீத் கோரிக்கை விடுத்துள்ளார். மாலத் தீவில் நடைபெற இருந்த தேர்தலை போலீஸார் தடுத்து நிறுத்தி விட்டனர். முன்னாள் அதிபர் நஷீத் 2008_ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற  தேர்தலில் வெற்றிபெற்று அதிபர் ஆனார்.  சில மாதங்களுக்கு முன்னர் அவரை அதிரடியாக நீக்கிவிட்டு வாஹித் அதிபரானார். பின்னர் உலக நாடுகள் வற்புறுத்தலின் பேரில் அங்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் நஷீத் 45 சதம் பெற்று பெரும்பான்மை பெற்றார். இதையடுத்து நடைபெறும் 2_ம் கட்ட தேர்தலிலும் அவர்வெற்றிபெற்று அதிபராகும் வாய்ப்பு இருந்தது. அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இன்னொரு வேட்பாளர் காசிம் இப்ராகிம் தொடுத்த தேர்தல் முறைகேடு வழக்கு காரணமாக தேர்தல் முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. 

இந்நிலையில் தேர்தலை பேஏ"லீஸார் தடுத்து நிறுத்தினர். தேர்தலை நடத்த வலியுறுத்தி நஷீத் ஆதரவாளர்கள் மாலேயில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலத் தீவில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த இயலாத அதிபர் வாஹித் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் அதிபர் நஷீத் கோரிக்கை விடுத்துள்ளார். அதிபர் வாஹித், ராணுவ அமைச்சர் நஷீம், போலீஸ் கமிஷனர் அப்துல்லா ரியாஷ் ஆகியோர் பதவியில் நீடிக்கும் வரை தேர்தலை நடத்த முடியாது. தேர்தலை நடத்தக்கோரி மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நஷீத் கூறினார் 

நவம்பர் 26_ம் தேதி மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.  வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் நவம்பர் 9_ம் தேதி மறுதேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப் படும் என்று தேர்தல் ஆணையர் தௌபீக் தெரிவித்தார்.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்