முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெயின் - பிலாண்டரை குற்றம் சாட்ட வேண்டாம்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், டிச. 25 - இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தெ.ஆ. வெற்றிக்காக ஆடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஸ்டெயின் மற்றும் பிலாண்டரை குற்றம் சாட்ட 

வேண்டாம் என்று டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார். 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. பரபரப்பான நிலைக்கு வந்த இந்த டெஸ்டில் கிளைமாக்ஸ் என்ற முடிவு ஏற்படாமல் டிரா ஆனது. 

கடைசி நாள் ஆட்டத்தின் முதல் 2 மணி நேரம்இந்தியாவின் பக்கம் ஆட்டம் இருந்தது. பின்னர் டிவில்லியர்ஸ், பெலிசிஸ் சதத்தால் தென் ஆப்பிரிக்கா பக்கம் சென்றது. 

வெற்றிக்கான ரன் இலக்கு 458 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தெ. ஆ. அணி 8 ரன்குறைவாக எடுத்து இருந்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

8 _வது விக்கெட்டான ஸ்டெயின், பிலாண்டர் ஜோடி களத்தில் இருந்தது. %

வற்றிக்காக ஆடவில்லை என்ற குற்றச்சாட்டு இருவர் மீதும் உள்ளது. இருவரும் தலா ஒரு ஓவரை மெய்டன் செய்தனர். 

இந்த டெஸ்ட் குறித்து சதம் அடித்தவரும், தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் போட்டி கேப்டனுமான டிவில்லியர்ஸ் கூறியதாவது _ 

கடைசி 3 ஓவரில் வெற்றிக்காக போராடாமல் டிரா செய்யும் வகையில் ஸ்டெயின், பிலாண்டர் ஆடினார்கள் என்று அவர்கள் இருவரையும் குறை கூறுகிறார்கள் . இது தவறானது. 

இக்கட்டான நிலையில் பின்வரிசை வீரர்கள் ரன்களை எடுப்பது சிரமமானது. அந்த நேரத்தில் அடித்து ஆடும் போது விக்கெட் போய் விட்டால் தோல்வி தான் ஏற்படும். 

இதனால் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இருவரும் டிரா செய்யும் வகையில் ஆடினார்கள். வெற்றி பெற முடியாமல் போனதற்காக இருவரையும் குற்றம் சாட்டக் கூடாது. 

வெற்றியை நெருங்கி வந்து வெற்றி பெற முடியாமல் போனது எங்களுக்கு ஏமாற்றம் தான். அதே நேரத்தில் வெற்றி பெற இயலாமல் போனதற்கு இந்திய அணியும் ஏமாற்றம் அடைந்து இருக்கும். 

இங்கிலாந்து முன்னாள் வீரர் ராபின் ஜேக்மேன் டெலிவிசனில் கூறியது போல இரு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் ஏமாற்றம் அளித்தது. ஆனால் கடைசி நாளில் கிரிக்கெட் தான் வெற்றி  பெற்றது. இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்