முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 30 - டெல்லியில் பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது. எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் சட்டசபையை கலைக்க உத்தரவிடக் கோரி ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே 28 எம்எல்ஏக்களுடன் தனி பெரும் கட்சியாக உள்ள பா. ஜ னதா ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மாநில துணை நிலை கவர்னர் நஜீப் ஜங் கடிதம் எழுதினார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது டெல்லியில் புதிய ஆட்சி அமைக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்து இருப்பதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இந்த நிலையில் டெல்லியில் புதிய ஆட்சி அமைவதற்காக சாத்தியகூறுகள் பற்றி ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி கு றிப்பில், ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததன் பேரில் டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பதற்காக வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்