முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்தி - சிதம்பரத்துக்கு எதிராக போராட்டம்: 75 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் பேசினார்.அப்போது அவர் காமராஜர் பற்றி குறிப்பிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தான் பேசியது பற்றி அவர் விளக்கமும் அளித்து இருந்தார்.இதற்கிடையே நாடார் அமைப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை கண்டித்து நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள அவரது வீட்டு முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.இதனால் கார்த்தி ப.சிதம்பரம் வீட்டுக்கு செல்லும் சாலையில் தடுப்பு வேலி அமைத்து போராட்டக்காரர்கள் உள்ளே வர முடியாதபடி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் நேற்று .காலை 11.30 மணியளவில் நாடார் அமைப்பினர் திரண்டு வந்தனர். அவர்களை பக்கத்து தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு சத்ரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமை தாங்கினார். சென்னை மற்றும் புறநகர் நாடார் கூட்டமைப்பு அமைப்பாளர் மின்னல் ஸ்டீபன் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கார்த்தி ப.சிதம்பரத்துக்கு எதிராக கோஷம் போட்டனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர். நிர்வாகிகள் முத்துரமேஷ், கே.டி.முத்து, வெங்கட், சுயம்பு, ஜெயமோகன், கோயம்பேடு பிரபாகர், நெற்குன்றம் ரமேஷ், பால்பாண்டியன், செல்வராஜ், அற்புதராஜ், செல்வின், செம்பாக்கம் ராதாகிருஷ்ணன், கே.சி.ராஜா உள்பட பலர் கைதானார்கள்.இதற்கிடையே ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை அறிந்து கார்த்தி ப.சிதம்பரம் வீட்டு முன்பு ஏராளமான காங்கிரசாரும் திரண்டு இருந்தனர். சேவாதள அமைப்பாளர் எஸ்.எம்.குமார், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி தலைவர் அரிகிருஷ்ண ரெட்டி, ஆதிஜான்சன், நாச்சி குளம் சரவணன், ஐஸ் செல்வம், சசிகுமார், கராத்தே செல்வம் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.இந்த பரபரப்புக்கு இடையே வெளியூர் சென்று இருந்த கார்த்தி ப.சிதம்பரம் விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார். போலீசார் அவரை வாலஸ் கார்டன் சாலை வழியாக வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து