முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வவுனியா சிறையில் இருந்து 43 தமிழக மீனவர்கள் விடுதலை

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - வவுனியா சிறையில் இருந்து மேலும் 43 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய திரிகோணமலை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்த 86 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்று சிறையில் அடைத்தது. 86 மீனவர்களில் 29 பேர் நாகையை சேர்ந்தவர்கள். 57 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள். இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 86 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய அதிபர் சிறீசேனா உத்தரவிட்டார். சிறீசேனாவின் உத்தரவு மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட பகுதியின் கோர்ட்டுகளுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 43 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

நேற்று வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேலும் 43 மீனவர்களையும் விடுதலை செய்ய திரிகோணமலை கோர்ட் உத்தரவிட்டது. விடுதலையான 86 மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து