முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

44 எம்பிக்கள் உள்ள காங்கிரசுக்கு 52 செய்தி தொடர்பாளர்கள்

புதன்கிழமை, 25 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - நாடாளுமன்றத்தில் தற்போது 44 எம்பிக்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 52 செய்தி தொடர்பாளர்கள் உள்ளனர். லோக்சபா தேர்தல் மற்றும் அடுத்தடுத்த மாநில தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகளை மேலிடம் மாற்றி வருகிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமித்து மேலிடம் அண்மையில் அறிவித்தது. தற்போது 17 புதியவர்கள் உள்பட 52 செய்தி தொடர்பாளர்களை நியமித்து காங்கிரஸ் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு உள்ளிட்ட பலருக்கும் செய்தி தொடர்பாளராக பதவி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எம்பிக்கள் கவுரவ் கோகாய், சுஷ்மிதா தேப் ஆகியோர் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிபி ஜோஷி, அஜய்மக்கான், ஷகீல் அகமது ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர தீவிரம் காட்டி வரும் வேளையில் அதனை கடுமையாக எதிர்த்து நாடாளுமன்றத்திற்கு உள்ளும் புறமும் காங்கிரஸ் போராட வேண்டிய நிலை உள்ளது.

மேலும் விடுப்பில் சென்ற ராகுல் இம்மாத இறுதியில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ராகுல் விடுப்பு விவகாரம் குறித்து பேசவே காங்கிரசுக்கு நேரம் போதவில்லை. எனவே தற்போது செய்யப்பட்டுள்ள புதிய மாற்றத்தின் மூலம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் கட்சியின் எதிர்ப்பை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பார்கள் என்று மேலிடம் நம்புகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து