முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் ராணுவத்துக்கு 290 அமெரிக்க வீரர்கள் பயிற்சி

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

கீழ் - கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சயாளர்களுடன் போரிடுவதற்காக, 290 அமெரிக்க வீரர்கள் உக்ரைன் படையினருக்குப் பயிற்சி அளிக்கவிருப்பதாக உக்ரைன் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சர் ஆர்ஸன் அவாகோவ் கூறியதாவது:

உக்ரைன் படையினருக்கு அமெரிக்க ராணுவத்தின் பாராசூட் படையைச் சேர்ந்த 290 வீரர்கள் பயிற்சியளிக்கவுள்ளனர். அதற்காக, அவர்களனைவரும் போலந்து நாட்டு எல்லையை யொட்டி அமைந்துள்ள யாவோரில் ராணுவப் பகுதிக்கு அடுத்த மாதம் 20ம் தேதி வருவார்கள் என்றார் அவர்.

இத்தாலியில் நிலைகொண்டுளஅள அமெரிக்காவின் 173வது பாராசூட் ராணுவப் பிரிவு, 900 உக்ரைன் தன்னார்வப் படை வீரர்களுக்கு 3 கட்டப் பயிற்சிகள் அளிக்கவுளஅளது. ஒவ்வொரு கட்டப் பயிற்சியும் எட்டு வாரங்களுக்கு நீடிக்கும். அதனைத் தொடர்ந்து இரு நாட்டு வீரர்களும் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்வர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அண்டைய நாடான உக்ரைனில் அமெரிக்கா மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் சீற்றத்தைத் தூண்டும் என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து