முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: இந்தியா தோல்வி

திங்கட்கிழமை, 20 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்தியா 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், இரு போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.  ஹராரேயில் நடந்த 2-வது போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஜிம்பாப்வே 145 ரன்கள் குவித்தது.  இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

146 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஜிம்பாப்வேயின் கிரீமர் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளை ஜிம்பாப்வேயின் சிபாபா வென்றார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணி கேப்டன் ரஹானே கூறுகையில்., ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ஜிம்பாப்வே அணியின் ஆட்டத்தை பாராட்ட வேண்டும். தொடர் முழுதும் அவர்கள் நன்றாக விளையாடினாலும் 2-வது டி20 போட்டியில் அவர்களது பந்துவீச்சு, மற்றும் பீல்டிங் அபாரமாக இருந்தது. எங்களால் ஒரு பார்ட்னர்ஷிப்பை கூட அமைக்க முடியவில்லை. எங்கள் தரபில் பேட்டிங் சரியில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து