முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் மீண்டும் கலவரம்: 11 பேர் சுட்டுக் கொலை

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

டமாஸ்கஸ்,ஜூலை.29 - எகிப்து, துனிசியா நாட்டில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து சிரியா நாட்டிலும் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் நடந்து வருகின்றன. கடந்த 4 மாதமாக நடந்து வரும் போராட்டத்தில் ஆயிரத்து 400 பொதுமக்களும், 320 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகில் உள்ள ஹனேகர் நகரில் பொதுமக்கள் 2 ஆயிரம் பேர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். அப்போது ராணுவத்தினர் அவர்களை தடுக்க முயன்றனர். ராணுவ வீரர்கள் முன்னேறி வராமல் தடுக்க சாலைகளில் டயர்கள் மற்றும் பொருட்கள் போட்டு தீவைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர்கள் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். 

அந்த நகர் முழுவதையும் ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அந்த நகர் முழுவதும் பதட்டம் நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்