முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல்வாதிகள் மக்களின் எஜமானர்கள் அல்ல! சந்தோஷ் ஹெக்டே கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,ஜூலை.- 31 - அரசியல்வாதிகள் மக்களின் எஜமானர்கள் அல்ல என்று லோக்அயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.  பெங்களூர் பத்திரிக்கையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறும் போது,  ஊழல் செய்த அனைவரையும் விசாரிக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற வகையில் லோக்பால் மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பிரதமரை இந்த வரம்புக்குள் கொண்டு வரக் கூடாது என்று சிலர் கூறி வருகின்றனர். சட்டத்தை இயற்றிய நமது முன்னோர்கள் ஜனாதிபதி, கவர்னர், உயர் பதவி வகிக்கும் நீதிபதிகளை தவிர்த்து அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
பதவியில் இருக்கும் பிரதமரை அவர் பதவி இழந்த பின்னர்தான் விசாரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி என்றால் ஒரு பிரதமர் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து அவர் ஊழல் செய்தால் அவரை அத்தனை காலமும் விசாரிக்க முடியாது. அதற்காக அவர் பதவி இழக்கும் வரை காத்திருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் மக்களின் சேவகர்கள், நமது பணியை செய்வதற்காக நமது பிரதிநிதிகளாக அவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ளோம் என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.
தேர்தல் வரை சேவகர்கள் என்று கூறி வந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நமது எஜமானர்களாகி விட்டனர். லோக் அயுக்தா அமைப்பு வந்த பின்னர் ஊழல்கள் அடியோடு நின்று விட்டனவா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். அடியோடு நின்று விடவில்லை என்ற போதிலும் லோக் அயுக்தா நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சத்தினால் ஊழல் குறைந்துள்ளது. லோக் அயுக்தா உள்ளதால் குற்றம் செய்பவர்கள் அச்சத்தில் உள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்