முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 4 ஆண்டுகளில் அமைச்சர்களின் தினசரி செலவுக்கு ரூ.8 கோடி: உத்திரபிரதேச அரசு தகவல்

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

லக்னோ  - உத்திரபிரதேசத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அமைச்சர்களின் தினசரி செலவுக்கு ரூ.8.78 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது கைச்செலவுக்கு பணம் கொடுப்பது நடைமுறையில் உள்ளது. மாநிலத்துக்குட்பட்ட தொகுதிகளுக்கு செல்லும் போது அமைச்சர்களுக்கு தினமும் தலா ரூ.2500 கொடுக்கப்படுகிறது. மாநிலத்துக்கு வெளியில் சுற்றுப்பயணம் செல்லும் போது ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இப்படி கைச்செலவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் அமைச்சர்களுக்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டுள்ளது என்று பா.ஜ.க எம்.எல்.ஏ. சுரேஷ்கன்னா அரசிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு உத்திரபிரதேச மாநில அரசு பதில் அளித்துள்ளது. அதன்படி உத்திரபிரதேசத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அமைச்சர்களின் தினசரி செலவுக்கு என ரூ.8.78 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாச்சார அமைச்சர் அருணா கோரி அதிகபட்சமாக ரூ.23 லட்சம் பணத்தை கை செலவுக்கு என பாக்கெட் பணமாக பெற்றுள்ளார். முலாயம்சிங் யாதவின் நண்பரும் மூத்த அமைச்சருமான அசம்கான் ரூ.22.86 லட்சத்தை கை செலவுக்கு பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்