முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளாக உயர்த்தி தீர்மானம்

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.10 - சென்னை மாநகராட்சி 9 நகராட்சி, 8 பேரூராட்சி, 25 ஊராட்சிகளுடன் இணைத்து 200 வார்டுகளாக உயர்த்தியும், 15 மண்டலங்களாக பிரித்தும் நகராட்சி மன்ற அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் கார்த்திகேயன், துணை மேயர் சத்தியபாமா மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு 200 வார்டுகளாக உயர்த்தப்படுவது, 15 மண்டலங்களாக பிரிப்பது ற்றிய தீர்மானம் விவாதிக்கப்பட்டது.

சைதை ரவி (காங்கிரஸ்):​ பேசுகையில், `தொகுதி வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்' என்றார். இதற்கு பதில் அளித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 2001​ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பெண்கள் அதிகமாக இருக்கும் வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உறுப்பினர்களின் கருத்துக்கு இணங்க தொகுதி வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பது பற்றி அரசுக்கு தீர்மானம் அனுப்பப்படும்' என்றார்.

கமிஷனர் கார்த்திகேயன் பேசும் போது, `3​ல் ஒரு பங்கு பெண்கள் என்ற விகிதப்படி 67 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகள், இயற்கையான அமைப்புகளை வைத்து ஓரளவு நிர்வாக வசதிக்காக எல்லா தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும்படியும் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன' என்றார்.

மேயர் மா.சுப்பிரமணியன்:​ இது மட்டுமல்லாமல் நிர்வாக வசதிக்காக சென்னை மாநகரத்தை வடக்குப் பகுதி, மத்திய பகுதி, தென்பகுதி என்று 3 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் கூடுதல் கமிஷனர்களை நியமிக்கும் பரிந்துரையை கமிஷனர் அரசுக்கு அனுப்பியுள்ளார். இவ்வாறு மேயர் கூறினார்.

மேலும் கூட்டத்தில் கவுன்சிலர்கள் மங்கள்ராஜ், பிரபு, துரைராஜ் தேவகி உள்பட பலர் வார்டுகள் பிரிக்கப்பட்டதில் குறைகள் இருப்பதாகவும், அவசர அவசரமாக கூட்டத்தை நடத்தியதால் தீர்மானத்தை முழுமையாக படிக்க முடியவில்லை' என்று கூறினார்கள்.

 

அதற்கு பதில் அளித்த கமிஷனர், `பெரிய அளவில் குறைகள் இருந்தால் கடிதம் மூலம் கொடுங்கள்' சரி செய்யப்படும் என்றார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

விவாதம் முடிந்ததும் சென்னை மாநகராட்சி 9 நகராட்சி, 8 பேரூராட்சி, 25 ஊராட்சிகளுடன் இணைத்தும், 200 வார்டுகளாக உயர்த்தியும், 15 மண்டலங்களாக பிரித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மன்ற கூட்டம் முடிந்ததும் மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:​

ஏற்கனவே சென்னை 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னையாகவும், 155 வார்டுகள் கொண்ட சென்னையாகவும் இருந்தது. இந்தியாவில் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர் போன்ற மாநகரின் பரப்பளவோடு ஒப்பிடும் போது சிறிய மாநகரமாக இருந்தது. இதை பெரிய மாநகரமாக உருவாக்கி மத்திய அரசின் நிதி உதவிகளை பெறுதல், மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சிக்காக மாநகராட்சியின் விரிவாக்க சட்டம் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே நிறைவேற்றப்பட்டது. இதன்படி 424 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் சென்னை மாநகரம் விரிவுபடுத்தப்படுகிறது.

இதன்படி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சியில் திருவொற்றிர், அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், உள்ளகரம்​புழுதிவாக்கம், மணலி, கத்திவாக்கம், ஆகிய 9 நகராட்சிகள், புழல், போரூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பள்ளிக்கரணை உள்பட 8 பேரூராட்சிகள், முகலிவாக்கம், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், nullலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், மடிப்பாக்கம், பாலவாக்கம், கடப்பாக்கம், சடையாங்குப்பம், தீயம்பாக்கம், வடபெரும்பாக்கம், மத்தூர், கதிர்வேடு, புத்தாகரம், சூரப்பட்டு, ராமாபுரம், காரம்பாக்கம், நெற்குன்றம், இடையஞ்சாவடி, நொளம்nullர், மணப்பாக்கம் உள்பட 25 ஊராட்சிகளும் விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னை மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகள் அனைத்தும் 200 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்கள். தற்போது சென்னையில் 10 மண்டலங்கள் உள்ளன. இனி 15 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. அவை திருவொற்றிர் (மண்டலம்​1), மணலி (மண்டலம்​2), மாதவரம் (மண்டலம்​3), தண்டையார்பேட்டை (மண்டலம்​4), ராயபுரம் (மண்டலம்​5), திரு.வி.க. நகர் (மண்டலம்​6), அம்பத்தூர் (மண்டலம்​7), அண்ணா நகர் (மண்டலம்​8), தேனாம்பேட்டை (மண்டலம்​9), கோடம்பாக்கம் (மண்டலம்​10), வளசரவாக்கம் (மண்டலம்​11), ஆலந்தூர் (மண்டலம்​12), அடையாறு (மண்டலம்​13), பெருங்குடி (மண்டலம் 14), சோழிங்க நல்லூர் (மண்டலம்​15).

மண்டலம்​1​ல் வார்டு எண்.1 முதல் 14 வரையும், மண்டலம் 2​ல் 15 முதல் 21 வரையும், மண்டலம் 3​ல் 22 முதல் 33 வரையும், மண்டலம் 4​ல் 34 முதல் 48 வரையும், மண்டலம்​5​ல் 49 முதல் 63 வரையும், மண்டலம்​6​ல் 64 முதல் 78 வரையும், மண்டலம்​7ல் 79 முதல் 93 வரையும், மண்டலம்​8​ல் 94 முதல் 108 வரையும், மண்டலம்​9​ல் 109 முதல் 126 வரையும், மண்டலம்​10​ல் 127 முதல் 142 வரையும், மண்டலம்​11​ல் 143 முதல் 155 வரையும், மண்டலம் 12​ல் 156 முதல் 169 வரையும், மண்டலம் 13​ல் 170 முதல் 182 வரையும், மண்டலம் 14​ல் 183 முதல் 191 வரையும், மண்டலம் 15​ல் 192 முதல் 200 வரையும் வார்டுகள் இடம்பெற்றுள்ளன.

சென்னை மாநகரம் முழுவதும் வார்டு வாரியாக வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்களுக்காக 1385 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 1385 வாக்குச்சாவடிகளும், பொது வாக்காளர்களுக்கு 2111 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 4881 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

116 பொது வார்டுகள், 58 பெண்களுக்கான வார்டுகள், 9 ஆதிதிராவிட பெண்களுக்கான வார்டுகள், 17 ஆதிதிராவிடர்களுக்கான வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.

மையிலாப்nullர், ராயபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் ஆண்களுக்கு போட்டியிட வாய்ப்பில்லை என்று எதிர்க் கட்சி தலைவர், ஆளுங்கட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் முறையிட்டனர். எனவே தொகுதி வாரியாக பெண்களுக்கு 33.3 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்க வேண்டும் என கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்படுகிறது.

இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்