எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நன்செய் நிலத்தில் மட்டுமல்ல: களர்-உவர் நிலங்களில் பயிர் செய்து சாதிக்கலாம். மக்கள்தொகை அதிகரித்துச் செல்லும் இந்தக் காலக்கட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு குறைந்துவருகிறது. இதனால், பிரச்னைக்குரிய களர்-உவர் நிலங்களைச் சீர்திருத்தி சாகுபடி செய்து உணவு உற்பத்தியை மேம்படைய செய்வது இன்றைய காலக்கட்டத்தின் அவசியமாகிறது.
தமிழகத்தில் 4.7 லட்சம் ஹெக்டேர் களர்-உவர் நிலங்கள் இருக்கின்றன. குறிப்பாக, காஞ்சிபுரம், திருச்சி, சேலம், தருமபுரி, வேலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் களர் -உவர் நிலங்கள் அதிகளவு உள்ளன.
களர் நிலம்: களர் நிலம் என்றால் மண்ணில் களித்துகள்களில் சோடிய அயனிகள் அதிகமாகப் படிந்திருக்கும். இவ்வகை மண்ணின் கார அமிலத் தன்மை அதிகமாக இருக்கும். களர் மணி வயலில் மழை அல்லது நீர்பாசனத்தின் மூலம் மண்ணின் கட்டமைப்பு சிதைந்தும், மண்ணின் நீர் கடத்தும் திறன் குறைந்தும் நீர்த் தேக்கம் உண்டாகிறது. மேலும், பயிர்களின் வேர் சுவாசம் குறைந்தும், கோடியில் மண் இறுகியும் காணப்படும்.
உவர் நிலம்:- உவர் நிலங்களில் அதிகமாக நீரில் கரையக் கூடிய உப்பின் அளவு அதிகமாக இருந்தால், அது உவர் நலம் என்று பெயர். பெரும்பாலும் சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட், கால்சியம் குளோரைடு, மக்னீசியம் சல்பேட் போன்ற உப்புகள் பெருமளவில் கரைந்திருக்கும். இதனால் வேர்களின் நீர் உறிஞ்சும் சக்தி குறைந்துவிடும். அவ்வாறு சிரமப்பட்டு உறிஞ்சும்போது உப்புகளும் அதிகளவு உறிஞ்சப்பட்டு பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
தொழில்நுட்பம்:- மண் பரிசோதனை மூலம் உவர் தன்மை, களர் தன்மையைக் கண்டறிய வேண்டும். நிலத்தைப் புழுதிபட உழுது தயார் செய்ய வேண்டும். நன்குத் தூளாக்கப்பட்ட ஜிப்சத்தை சிபாரிசு செய்யப்பட்ட அளவு இட வேண்டும். உவர் தன்மை மட்டுமே இருந்தால் ஜிப்சம் இட வேண்டிய அவசியம் இல்லை. ஜிப்சத்தை மண்ணுடன் ஆழமாகக் கலக்கக் கூடாது.
வயலை 30 சென்ட் அளவு கொண்ட சிறு பாத்திகளாகப் பிரிக்க வேண்டும். முதில் பாத்தியின் 4 பக்கங்களிலும் ஆழமான (30 செ.மீ.) வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும். பின் மத்திய வடிகால், பக்க வடிகால் வாய்க்கால் அமைத்து, மத்திய வடிகால் வாய்க்காலை முக்கிய வடிகால் வாய்க்காலுடன் இணைக்க வேண்டும். வாய்க்கால் பாசன நீரை வயலில் கட்டி 48 மணி நேரம் வைத்திருந்து இயற்கையாகக் கசிந்து வடியும்படி செய்ய வேண்டும்.
48 மணி நேரம் கழித்து, அதிகமாக உள்ள தண்ணீரை வடித்துவிட வேண்டும். வயலில் தண்ணீர் கட்டி நிறுத்தியப் பிறகு வடிப்பதை 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும். ஏக்கருக்கு 20 கிலோ தக்கைப்பூண்டு வதையை விதைத்து, 40 நாள்கள் கழித்து வளர்ந்துள்ள பசுந்தாள் உரத்தை நிலத்திலேயே மடக்கி உழ வேண்டும். தக்கைப்பூண்டு விதைக்க முடியாத நிலையில், பிசுந்தழை உரத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் இட்டு உழவு செய்ய வேண்டும்.
சிபாரிசு செய்யப்பட்ட அளவு சர்க்கரை ஆலைக் கழிவை ஏக்கருக்கு 2 டன் என்ற அளவில் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும்.
பயிர் செய்யும் முறை:- களர்-உவர் நிலங்களைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்களான திருச்சி - 1, 2, 3, கோ - 43 போன்ற ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். கேழ்வரகு, பருத்தி, கரும்பு, மிளகாய், வெண்டை, கொத்தவரை, சோளம், வரகு, சூரியகாந்தி போன்ற பயிர்கள் களர் - உவர் தன்மையை தாங்கி வளரக் கூடியவையாகும். பரிந்துரைக்கப்பட்ட தழை சந்து அளவைவிட 25 சதவீதம் கூடுதலாக (நிலத்தை 4-ஆக பிரித்து) இட வேண்டும். கடைசி உழவுக்குப் பின் ஹெக்டேருக்கு 40 கிலோ என்ற அளவில் துத்தநாக சல்பேட் இட வேண்டும். இவ்வகை மண்ணில் கோடையில் விவசாயம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நெல், பருத்தி அல்லது நெல் பாசிபயறு அல்லது நெல், தட்டை பயிறு, உளுந்து போன்ற பயிர் சுழற்சி முறையைக் கையாள வேண்டும்.
இவ்வகை மண்ணில் ஊட்டச் சத்துகள் சரிவர கிடைப்பதில்லை. எனவே, அதிக அளவில் தொழுஉரம், தழைஉரம் இட வேண்டும். இந்த மண்ணுக்கு தழைச்சத்தை அம்மோனியம் சல்பேட் வடிவிலும், மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் வடிவிலும் சாம்பல் சத்தை பொட்டாசியம் சல்பேட் வடிவிலும் இட வேண்டும். மேலும் துத்தநாகச் சல்பேட் இந்த நிலங்களுக்கு மிக முக்கியம்.
ஜிப்சம் எளிதாகக் கிடைக்காத சூழ்நிலையில் களர் நிலத்தை எரிசாராய ஆலைக்கழிவின் மூலம் சீர்த்திருத்தலாம். எரிசாராய ஆலைக்கழிவில் கணிசமான சுண்ணாம்புச்சத்து உள்ளது. மேலும், இது அமிலத் தன்மையுடன் இருப்பதால் மண்ணில் உள்ள சுண்ணாம்புச்சத்தை கரையச் செய்து களர் நிலச் சீர்த்திருத்தத்துக்கு உதவுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தை சீர்த்திருத்துவதற்கு 2 லட்சம் லிட்டர் எரிசாராய ஆலைக்கழிவை வயலில் விட வேண்டும். 7 நாள்களுக்குப் பிறகு 10 முதல் 15 செ.மீ. உயரத்துக்கு நன்னீரைத் தேக்க வேண்டும். பிறகு 24 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரை வடிக்க வேண்டும். நெல்பயிரில் ஒரு குத்துக்கு 3 முதல் 5 நாற்றுகளை நட வேண்டும். களர்-உவர் மண்ணுக்கு அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும். மாற்றுக்கால் பாசனம் மிகவும் நல்லது. சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் நல்ல பயன் தரும். மானாவாரி களர் - உவர் நிலங்களில் பருத்தி, சோளம், வரகு, சூரியகாந்தி போன்ற பயிர்கள் பயிர் செய்து அதிக லாபம் அடையலாம்.
களர் - உவர் மண் சீர்த்திருத்தம் செய்வதோடு மட்டுமில்லாமல், பயிர் மண் உர நீர் நிர்வாக முறைகளையும் செவ்வனேக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வகை நிலங்களைக் கண்டு விவசாயிகள் மனம் தளதாரமல் விஞ்ஞான ரீதியில் விவசாயம் செய்து நல்ல விளை நிலங்களாக மாற்ற முடியும்.
ஆதாரம் : வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: சவுதி அரசிடம் பேசி விரைவான தீர்வை பெற்றுத்தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
16 Apr 2025சென்னை : தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் சவுதி அரசிடம் பேசி விரைவான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.&n
-
11 வரிசைகளிலும் இறங்கிய நரைன்
16 Apr 2025ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் பேட்டிங் செய்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.
-
2028-ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட்: போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
16 Apr 2025வாஷிங்டன் : 2028-ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
6 அணிகளுக்கு....
-
கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்
16 Apr 2025சண்டிகர் : ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
111 ரன்களுக்கு அவுட்..
-
தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: கொல்கத்தா கேப்டன் விளக்கம்
16 Apr 2025சண்டிகர் : பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் என்று கொல்கத்தா அணி கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
-
குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி: ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை படைத்த பஞ்சாப்..!
16 Apr 2025சண்டிகர் : முதலில் பேட்டிங் செய்து குறைவான ரன்களே அடித்து வெற்றி பெற்ற ஐ.பி.எல். வரலாற்றில் பஞ்சாப் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2025
17 Apr 2025 -
கேள்விக்கு பதில் தயார் செய்வது எப்படி? துரைமுருகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
17 Apr 2025சென்னை, ஒரு கேள்விக்கு பதில் தயார் செய்து 2 முதல் 3 மணி நேரத்தில் ஒத்திகை பார்த்து விட்டு தான் வருவேன் என்று துரைமுருகன் கூறினார்.
-
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு
17 Apr 2025மதுரை, மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்
17 Apr 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71,000-ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் என்கவுன்ட்டர்கள்: மதுரை ஐகோர்ட்டு கண்டனம்
17 Apr 2025மதுரை, துப்பாக்கி கொடுப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல. தற்காப்புக்கு தான் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது
-
சென்னையில் 30 புதிய பூங்காக்கள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
17 Apr 2025சென்னை, சென்னையில் இந்தாண்டு 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவரை நியமிக்க இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
17 Apr 2025புதுடெல்லி, அடுத்த விசாரணை தேதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்
-
9-வது முறையாக பிஜு ஜனதா தள தலைவர் பதவிக்கு நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
17 Apr 2025புவனேஸ்வர், ஒடிசா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை 9-வது முறையாக நேற்று (வியாழக்கிமை), புவனேஸ்வர
-
மேற்கு வங்கத்தில் வேலை இழந்த ஆசிரியர்கள் பணியில் தொடரலாம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி
17 Apr 2025புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பணியினை இழந்த முறைகேடு புகாரில் சிக்காத மேற்கு வங்க ஆசிரியர்கள் பணிகளில் தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.
-
தீரன் சின்னமலையின் 270-வது பிறந்தநாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
17 Apr 2025சென்னை, தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று மரியாதை செலுத்தினார்.
-
அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி
17 Apr 2025வாஷிங்டன், அமெரிக்க வரி விதிப்புக்கு சீன நிறுவனங்கள் பதிலடி கொடுத்துள்ளது.
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது: இ.பி.எஸ். தனித்துதான் ஆட்சி அமைப்பார்: தம்பிதுரை உறுதி
17 Apr 2025சென்னை, தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது" என்று அ.தி.மு.க.
-
இந்துக்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு
17 Apr 2025இஸ்லாமாபாத், இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்துள்ளார்.
-
சட்டத்தை கையில் எடுக்கும் காவல்துறை: வழக்கு ஒன்றில் ஐகோர்ட் கிளை கருத்து
17 Apr 2025மதுரை: காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
-
விண்வெளி துறையில் ரூ.10,000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்க இலக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
17 Apr 2025சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெள
-
தெலங்கானாவில் பரபரப்பு: குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து 30 மாணவர்களை கொல்ல முயற்சி
17 Apr 2025ஹைதராபாத், குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மே 15-ம் தேதி நடைபெறும் இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு: பிரதமர் மோடி நார்வே பயணம்
17 Apr 2025புதுடெல்லி, இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் மே 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நார்வே செல்கிறார்.
-
22 மாதங்களுக்குப் பிறகு மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
17 Apr 2025விழுப்புரம், மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் 22 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
-
கர்நாடகாவில் 3 நாட்களாக நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
17 Apr 2025கர்நாடக, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.