முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சி, தெற்கு மேட்டுத் தெருவில் ஜல்லிக்கட்டு : கலெக்டர்.அண்ணாதுரை துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சி, தெற்கு மேட்டுத் தெருவில் ஜல்லிக்கட்டினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (14.02.2017) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு

 

 

ஜல்லிகட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் தெற்கு கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரியான விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் 380 காளைகளும், 400 காளை பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளையினை முறையாக கால்நடைத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுடைய காளைகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றது. கால்நடைத்துறையின் மூலம் காளைகளுக்கு தனியாக ஆம்புலென்ஸ் வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு மருத்துவத் துறையின் மூலம் முறையான பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பணிகளில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மாலை 3.00மணிக்கு இப்போட்டியானது நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.

 

இவ்விழாவில் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கால்நடைத்துறை இணை இயக்குநர் மாசிலாமணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிங் ஜெகதீசன், வட்டாட்சியர் குருமூர்த்தி, மற்றும் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்