முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு: நெல்லை அஞ்சல் கோட்டத்தில் 27 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      திருநெல்வேலி

திருநெல்வேலி

 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்காக, நெல்லை அஞ்சல் கோட்டத்தில் இதுவரை 27 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை அனுப்பி வைக்க இம் மாதம் 22 ஆம் தேதி கடைசி நாளாகும்.தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை-ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை-ஆண்), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் (ஆண்) பதவிகளுக்கு 15,711 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அண்மையில் வெளியிட்டது.இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2017 தேதியின்படி 18 - 24க்குள் இருக்க வேண்டும். உடல் தகுதி - உயரம் 170 செ.மீ., மார்பளவு சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீ., மூச்சடக்கிய நிலையில் குறைந்தபட்சம் 5 செ.மீ. மார்பு விரிவாக்கம் இருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்ப விநியோகம் தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வழங்கப்படுகின்றன. திருநெல்வேலி கோட்டத்தின் கீழ் திருநெல்வேலி ஸ்ரீபுரம், பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம் உள்ளிட்ட தலைமை மற்றும் வட்டார அஞ்சலகங்களில் ஜனவரி 23 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பக் கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.135 ஐ அஞ்சலகத்தில் செலுத்தி, அதற்கான ரசீதை விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர இம் மாதம் 22 ஆம் தேதி கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் சீருடைப் பணிக்கு விண்ணப்பிக்க இளைஞர்கள், இளம்பெண்கள் மிகுந்த ஆர்வத்தோடு விண்ணப்பங்களை வாங்கிச் செல்கிறார்கள். பாளையங்கோட்டை அஞ்சலகத்தில் வியாழக்கிழம மாலை வரை மொத்தம் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. தொடர்ந்து இம் மாதம் 22 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். இக் கோட்டத்தில் இதுவரை மொத்தம் 27 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.மேலும், முழுமையான விவரங்கள் அறிய www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம் என்றனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்