முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி கோ_ஆப்டெக்சில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனை

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      நீலகிரி

ஊட்டி கோ_ஆப்டெக்ஸ் மலையரசி விற்பனை நிலையத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது-

                           கைக்குட்டை முதல் பட்டுப்புடவை வரை

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ_ஆப்டெக்ஸ் கடந்த 81 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ_ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு பேருதவி செய்து வருகிறது. தற்போது கோ_ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெரும் வகையில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்திட்டம் கைக்குட்டை முதல் பட்டுப்புடவை வரை அனைத்து இரகங்களுக்கும் பொருந்தும். எனவே வாடிக்கையாளர்கள் இரண்டு வாங்கினால் கூடுதலாக ஒன்று இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இரண்டு பொருட்கள் வாங்கும் போது என்ன பொருள் விலை குறைவாக உள்ளதோ அந்த விலைக்கு மூன்றாவது பொருளை எடுத்துக்கொள்ளலாம். இந்த சிறப்பு விற்பனை வரும் 28.03.2017 வரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

                                   ரூ.18 லட்சம் இலக்கு

கடந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் கோவை மண்டலத்தில் உள்ள கோ_ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.257.98 லட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.350 லட்சங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டி மலையரசி விற்பனை நிலையத்தில் கடந்தாண்டு இச்சிறப்பு திட்டத்தின் மூலம் ரூ.10.26 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.18 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் கோ_ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுரேஷ்குமார், மேலாளர்(வடிவமைப்பு) பாலமுருகன், துணை மண்டல மேலாளர்கள் மோகன்குமார், ராதாகிருஷ்ணன், மேலாளர் நடராஜன், பிரீக்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர் பர்னபாஸ் அலெக்ஸாண்டர், மலையரசி விற்பனை நிலைய மேலாளர்(பொறுப்பு) சபீனா நாஸ் மற்றும் கோ_ஆப்செக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்