முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகப்பெரிய ஊழல்களில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க 2019-ல் ஆட்சியை இழக்கும்: மம்தா ஆவேசம்

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா, பல மாநிலங்களில் பா.ஜ.க அரசு பயங்கரமான ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது, ஆனால் மத்திய அரசின் கைப்பாவைகளான சி.பி.ஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்டவை இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்/று கடுமையாக சாடினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.மேலும் சாராதா, நாரதா விசாரணையில் உண்மையான பாதையில் செல்லவில்லையெனில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

யார் என்ன சாப்பிட வேண்டும், யார் என்ன உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட இவர்கள் யார்? சிலர் இறைச்சி சாப்பிடமுடியவில்லை என்றும் கர்ப்பிணிப் பெண்கள் முட்டை சாப்பிட முடியவில்லை என்றும் புகார் அளிக்கின்றனர். பின் எதைத்தான் உண்பார்கள்? - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

ராஜஸ்தானில் ஆயிரம் கோடிக் கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள ஊழல் புகார் எழுந்துள்ளது, சி.பி.ஐ எங்கு சென்றது. என்ன தூங்கிக் கொண்டிருக்கிறார்களா? கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் ஈடுபட்டுள்ள ஊழலின் அளவு எத்தனை பெரியது அவர்கள் பா.ஜ.கவின் நண்பர்களோ?

மத்தியப் பிரதேசத்தில் நாட்டையே உலுக்கிய வியாபம் ஊழல், இதில் பலர் ஏற்கெனவே கொல்லப்பட்டுள்ளனர். எங்கே சி.பி.ஐ? குஜராத் பெட்ரோலியம் ஊழல் ரூ.20,000 கோடிபெறும் எங்கு அரசு விசாரணை முகமைகளான சி.பிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை?

எதிர்ப்பில் வேறு எந்தக் கட்சியை விடவும் அதிகக் குரல் எழுப்புவது நாங்களே சிபிஐ மூலம் எங்கள் வாயை அடைக்க முடியாது.நாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதற்கு உங்கள் சான்றிதழ் தேவையில்லை, உங்கள் சான்றிதழ்களை நாங்கள் அறவே வெறுக்கிறோம். மக்கள் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் எங்களுக்கு முக்கியம்.
யார் பணமதிப்பு நீக்கத்துக்கும், ஜிஎஸ்டிக்கும் எதிராக குரல் எழுப்புகிறார்களோ அங்கெல்லாம் சி.பி.ஐ கட்டவிழ்த்து விடப்படுகிறது 2019 லோக்சபா தேர்தலுக்குப் பின் ‘பெரியண்ணா’ (மோடி) பிரதமர் அலுவலகத்தைக் காலி செய்து கொண்டு போக வேண்டியதுதான்.

ஆனால் அடுத்த ஆண்டே நாடாளுமன்றத் தேர்தலை வைக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது. சாரதா, நாரதா என்று நீங்கள் செல்லுங்கள், ஆனால் 2019-ல் பா.ஜ.க வினர் அதிகாரத்தை விட்டு போய்விடுவார்கள், இது அவர்களுக்கு நான் விடுக்கும் சவால், இந்தத் தியாகிகள் தினத்தில் இந்தச் சவாலை முன்வைக்கிறேன். சாரதா ஊழல் விசாரணை ஏன் தாமதமாகிக் கொண்டிருக்கிறது? முன்னணி திரிணமூல் தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக விசாரிக்கலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர், இதனால் இவர்களை அவமானப்படுத்தலாம் என்று நினைக்கின்றனர். நாரதா பின்னணியில் உள்ளவர்கள் மீது ஆயிரம் கோடிக் கணக்கில் அவதூறு வழக்கு தொடர்வோம்.

யார் என்ன சாப்பிட வேண்டும், யார் என்ன உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட இவர்கள் யார்? சிலர் இறைச்சி சாப்பிடமுடியவில்லை என்றும் கர்ப்பிணிப் பெண்கள் முட்டை சாப்பிட முடியவில்லை என்றும் புகார் அளிக்கின்றனர். பின் எதைத்தான் உண்பார்கள்?

தங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதே சாமானிய மக்களுக்கு தெரியவில்லை, தலித்துகளும், சிறுபான்மையினரும் கவுரவமாக வாழ முடியுமா என்று ஐயம் கொண்டுள்ளனர். இந்துக்களே கூட சில போலி இந்துக்களால் அச்சமடைந்துள்ளனர். பெங்கால் தவிர டெல்லியிலும் கூட யாருக்கும் பாதுகாப்பில்லை. பா.ஜ.க தலைவர்களில் சிலரை விமர்சிக்கும் நோபல் பரிசு வென்ற அமர்த்யா சென்னுக்கே நாட்டில் பாதுகாப்பில்லை. இவ்வாறு பேசினார்  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து