முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் கட்சிகளுக்கான நிதியுதவி முறைப்படுத்தப்படும்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிப்பணிகளுக்காக பெறும் நிதியுதவி முறைப்படுத்தப்படும். அதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வழிவகை செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிப்பணிகளுக்காக பெறும் நிதியுதவி முறைப்படுத்தப்படும். அதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வழிவகை செய்யப்படும். - மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி

டெல்லியில் நிதியமைச்சகம் சார்பில் நடைபெறும் பொருளாதார கருத்தரங்கை துவக்கிவைத்துப் பேசிய அருண் ஜெட்லி, "அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிப்பணிகளுக்காக பெறும் நிதியுதவி முறைப்படுத்தப்படும். அதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வழிவகை செய்யப்படும்.

இதுதொடர்பாக அரசு தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. கடந்த 70 ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் கண்ணுக்குத் தெரியாத பண ஆதாரத்தால் இயக்கப்பட்டிருக்கிறது. இதனை மாற்ற அரசியல் கட்சிகளுக்கான நிதி ஆதாரம் முறைப்படுத்தப்படுவது அவசியம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் ஜிஎஸ்டி வரி விதிப்பும் பணப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல்மயமாக்க உதவும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து