முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக விரைவில் அனைத்து கட்சி கூட்டம் : சல்மான் குர்ஷீத்

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. 20- தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக விரைவில் அனைத்து கட்சி கூட்டம் : சல்மான் குர்ஷீத் புதுடெல்லி, நவ.20- டெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  அவர் கூறுகையில்  தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான உத்தேச திட்டங்கள் சுருக்கமாக தயாரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த உத்தேச  திட்டங்கள் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியதும்  இந்த அனைத்து கட்சி  கூட்டம் கூட்டப்படும் என்றும் குர்ஷீத் கூறினார்.  தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்பட்டதும் அந்த சீர்திருத்தங்கள் சட்டதிருத்தங்கள் வாயிலாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இழிவான குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது, தேர்தல் செலவுகளை முறைப்படுத்துவது, தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடை செய்வது உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த தேர்தல் சீர்திருத்தங்களில்  சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் மாற்றங்கள்  கொண்டு  வரப்படும் என்றும் அவர் கூறினார். பெண்கள் , எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு அரசு பணம் வழங்குவது குறித்தும் இந்த  தேர்தல் சீர்திருத்தங்களில்  ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடும் இவர்களுக்கு ஆண்டு  வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது. அதே போல அவர்களின் அசையும் அல்லது அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 22 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது . அப்போதுதான் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசாங்க பணம் கிடைக்கும். என்பதும் தேர்தல் சீர்திருத்தங்களில் ஒன்றாக இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்சிகளும் தங்களது கணக்குகளை  மத்திய கணக்கு தணிக்கை குழுவால் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ள  தணிக்கை முகமையகங்களில்தான் சமர்ப்பிக்க வேண்டும். இது கட்டாயமாக்கப்பபடும் என்பதும் ஒரு அம்சமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்