முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பகுதிகளில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

வியாழக்கிழமை, 7 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4க்கு உட்பட்ட  பகுதிகளில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.87 சுப்பிரமணியபுரம் ஆர்.எஸ்.நாயுடு பூங்காவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  தொட்டியினையும், வார்டு எண்.91 நேதாஜி தெரு, கொத்தனார் பிளாக்கில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், வார்டு எண்.93 டி.வி.எஸ். நகர் சந்தானம் தெரு மற்றும் குறுக்குத் தெருவில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலினை பார்வையிட்டு உடனடியாக சுத்தம் செய்து மழைநீர் சீராக செல்வதற்கு வழிவகை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து வார்டு எண்.98 திருநகர்; மீனாட்சி தெரு, அண்ணா தெரு, அன்னை சத்தியா தெரு, அண்ணா கிழக்கு தெரு, இளங்கோ நகர் தெரு, முத்தையா மேடு, ஈஸ்வரன் கோவில் தெரு, மந்தித் தோப்பு, உச்சியாகோவில் 1வது, 2வது தெரு, மன்னர் திருமலை நாயக்கர் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டு சாலையின் தொடக்கத்திலும் இறுதியிலும் என அனைத்து சாலைகளிலும் சாலையின் பெயர் பலகையினை வைக்குமாறு உத்தரவிட்டார். திருநகர் மெயின் சாலையில் மீனாட்சி தெரு சந்திப்பில் இருந்த தேநீர் கடையில் குப்பை தொட்டி வைக்காமல்  குப்பைகளை சாலையில் கொட்டிய காரணத்தினால் அக்கடைக்கு அபராதம் விதிப்பதுடன் அக்கடையை அகற்றவும் உத்தரவிட்டார். திருநகரில் நடைபெற்ற தீவிர துப்புரவுப் பணியினை பார்வையிட்டு ஈஸ்வரன் கோவில் தெருவில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களிடம் களப்பணியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், பணி மேற்கொள்ளப்பட்ட வீடுகளின் பட்டியல் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர்  சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சி;த்திரவேல், சுகாதார அலுவலர் திரு.ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளர் திரு.சுப்புராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து