முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பர் 6-​ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம்: பலத்த பாதுகாப்பு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

தினம் வரும் 6-ந் தேதி கடைபிடிப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்சலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்த விபரம் வருமாறு:- டிசம்பர் 6-​ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் ஆண்டுதோறும் எடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கம் போல பாதுகாப்பு ஏற்பாடுளை ரெயில்வே போலீசார் செய்ய தொடங்கி விட்டனர். அனைத்து ரெயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்nullர், மூர்மார்க் கெட், தாம்பரம் ரெயில் நிலையங்களில் தமிழக ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் சேர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ரெயில் நிலையங்கள் மற்றும் பிளாட்பாரங்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமிரா மூலம் பயணிகள் கண்காணிக்கப்படுகிறார்கள். சந்தேகப்படும்படியான நபர், பொருட்களை தீவிர பரிசோதனைக்கு பிறகு உட்படுத்தப்படுகின்றனர். சென்ட்ரல், எழும்nullர் நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டு முக்கியமான நுழைவு வாசலில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகளின் உடமைகள் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்ட நுழைவு கதவுகள் நிலையங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அனைத்து பிளாட்பாரங்கள், ரெயில் பெட்டிகள் முதலியவற்றை கண்காணித்து வருகின்றனர்.   தற்போதைய கண்காணிப்பு வரும் சனிக்கிழமை முதல் மேலும் தீவிரமாகும். பாதுகாப்பு பணியில் போலீசார் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு போலீசாருக்கும் 12 மணி நேரம் பணி ஒதுக்கப்படுகிறது. ரெயில்வே பார்சல் அனுப்ப 3 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

4-​ந் தேதி முதல் பார்சல் பதிவு செய்யப்படமாட்டாது. மற்ற பொருட்களும் தீவிர சோதனைக்கு பிறகு தான் அனுப்பப்படும். வெடிகுண்டு மோப்பநாய் மற்றும் நிபுணர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். முக்கிய ரெயில்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை சீனியர் டிவிசனல் பாதுகாப்பு கமிஷனர் எஸ்.ஆர்.காந்தி கூறியதாவது:- அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். வெடி குண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் பார்சல் பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்