முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் நெல்லையப்பர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      தேனி
Image Unavailable

தேனி -பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களின் அறிவியல் படைப்பிற்கான கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் இப்பகுதியில் உள்ள பத்து பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தது. இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மாணவர்களின் படைப்புகளை வி.நி. அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மோகன் மற்றும் அம்மையப்பன் ஆகியோர் பார்வையிட்டு சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்தனர். தொடக்கப்பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை காந்திநகர் ஊராட்சி துவக்கப்பள்ளி,  காமாட்சிபுரம் மார்க்கண்டேயா துவக்கப்பள்ளி, ஆரோக்கியமாதா நகர்; ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும் ஓட்டு மொத்த சிறப்பு கேடயத்தை பெரியகுளம் பி.டி.ராஜன் துவக்கப்பள்ளி பெற்றனர். நடுநிலைப்பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை முறையே நெல்லையப்பர் நடுநிலைபள்ளி, முருகமலைநகர் அரசு உயர்நிலைபள்ளி, காந்தி நகர் அரசு உயர்நிலைப்பள்ளியும் பெற்றது. மேலும் ஒட்டு மொத்த சிறப்பு கேடயத்தை நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளி பெற்றது. பரிசளிப்பு விழாவில் நெல்லையப்பர் பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். நிர்வாகி ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர்கள் மோகன் மற்றும் அம்மையப்பன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். தலைமையாசிரியர் பெருமாள் நன்றி கூறினார். இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து