முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் 2-வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதியும் மழையால் தடைபட்டது. 21 ஓவர்களே வீசப்பட்டது. முடிவில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 74 ரன்களை எடுத்துள்ளது.

பீல்டிங் தேர்வு
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் இலங்கை அணி கேப்டன் சண்டிமல் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். மழைக்காரணமாக மதிய 1.30 மணிக்குத்தான் ஆட்டம் தொடங்கியது, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லக்மலின் அபார பந்து வீச்சால் லோகேஷ் ராகுல் (0), தவான் (8), கோலி (0) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

மழை குறுக்கீடு
இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கீட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடித்துவைக்கப்பட்டது, புஜாரா 8 ரன்னுடனும், ரகானே 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். லக்கல் 6 ஓவரில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

புஜாரா நம்பிக்கை
நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 15 நிமிடம் முன்னதாக 9.15-க்கே தொடங்கியது. நேற்று 98 ஓவர்கள் வீசி முடிவு செய்யப்பட்டது. புஜாரா, ரகானே ஆட்டத்தை தொடர்ந்தனர். ரகானே 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் புஜாரா நம்பிக்கையுடன் விளையாடினார்.

2-வது நாள் முடிவு
6-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விக்கெட் கீப்பர் சகா ஜோடி சேர்ந்தார். இந்தியா 32.5 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு உணவு இடைவேளை விடப்பட்டது. அதன்பின்பும் மழை தொடர்ந்து பெய்தது. பின்னர் மழை விட்டாலும் பவுண்டரி லைன் அருகே ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் 2-வது நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. 2-வது நாள் இந்தியா 21 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்தது. புஜாரா 47 ரன்களுடனும், சகா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். லக்மல் 11 ஓவர்கள் வீசி 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 9 ஓவர்கள் மெய்டனாக வீசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து