முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சனிப்பெயர்ச்சிக்கு திருநள்ளாறில் 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

காரைக்கால், டிச.- 19 - வருகிற 21 ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற இருப்பதால் அதற்கு முந்தைய சனிக்கிழமையான கடந்த 17 ம் தேதி திருநள்ளாறில் 3 லட்சம் பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  காரைக்காலில் உள்ள திருநள்ளாறில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்த சனிப்பெயர்ச்சி விழா வருகிற 21 ம் தேதி (புதன்கிழமை)நடைபெற இருக்கிறது. இதையொட்டி கடந்த 17 ம் தேதி சனிக்கிழமையன்று பக்தர்கள் பெருந்திரளாக திருநள்ளாறில் திரண்டனர். கிட்டத்தட்ட 3 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கோவிலை சுற்றி 32 இடங்களிலும், நளன் குளத்தை சுற்றி 12 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  மேலும் நளன் குளத்தில் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சனிப்பெயர்ச்சி நாளன்று 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நள தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடும்போது அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க படகு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வாகனங்களை நிறுத்த 14 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  கோவிலின் உள்பகுதியில் மருத்துவ குழு ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நடமாடும் மருத்துவ குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அமைதியான முறையில் சுவாமியை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும், தேவஸ்தான நிர்வாகமும் செய்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்