முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்டி அதிகாரிகள், மற்றும் போட்டி நடுவர்களுக்கு சம்பளத்தை இரட்டிப்பாக்கும் பி.சி.சி.ஐ.

வியாழக்கிழமை, 31 மே 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : போட்டி நடுவர்கள், ஸ்கோர் கணக்கிடுபவர்கள், இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு, வீடியோ ஆய்வு நிபுணர்கள் ஆகியோருக்கு 2 மடங்கு ஊதிய உயர்வு என்று பி.சி.சி.ஐ. தீர்மானித்துள்ளது.

2 மடங்கு ஊதிய உயர்வு

இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு, போட்டி நடுவர்கள், ஸ்கோர் கணக்கிடுபவர்கள்,  வீடியோ ஆய்வு நிபுணர்கள் ஆகியோருக்கு 2 மடங்கு ஊதிய உயர்வு என்று பி.சி.சி.ஐ. தீர்மானித்துள்ளது. இதற்கான முடிவை, சபா கரீம் தலைமையிலான பி.சி.சி.ஐ. கிரிக்கெட் நடவடிக்கைக் குழு மேற்கொண்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.1 கோடி வரையில்...

தற்போதைய நிலையில், தேர்வுக் குழு தலைவருக்கான ஆண்டு ஊதியம் ரூ.80 இலட்சமாகவும், உறுப்பினர்களுக்கான ஆண்டு ஊதியம் ரூ.60 இலட்சமாகவும் உள்ளது. ஊதிய உயர்வு எதிர்பார்ப்பின்படி, தேர்வுக் குழு தலைவருக்கான ஊதியம் ரூ.1 கோடி வரையில் அதிகரிக்கப்படலாம். அதேபோல், உறுப்பினர்களுக்கான ஊதியம் ரூ.75 இலட்சம் முதல் ரூ.80 இலட்சம் வரையில் இருக்கலாம்.

நாளொன்றுக்கு ரூ.40 ஆயிரம்..

இதனிடையே, உள்நாட்டு போட்டி நடுவர்கள், கள நடுவர்கள், ஸ்கோர் கணக்கிடுபவர்கள், வீடியோ ஆய்வு நிபுணர்கள் ஆகியோருக்கான போட்டி ஊதியத்தை இரட்டிப்பாக்கவும் பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.மேற்குறிப்பிட்டவர்களுக்கு கடைசியாக, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டிருந்தது. ஊதிய உயர்வின்படி, கள நடுவர்களுக்கு முதல்தர கிரிக்கெட், மூன்று நாள் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

ஊதியம் விவரங்கள்..

தற்போது அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. டி-20 போட்டியைப் பொருத்த வரையில் முன்பு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், இனி ரூ.20 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. போட்டி நடுவர்களுக்கான ஊதியம் டி-20  ஓவர் போட்டி  தவிர இதர போட்டிகளுக்கு ரூ.30 ஆயிரம், டி-20 ஓவர்  போட்டிகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. ஸ்கோர் கணக்கிடுபவர்களுக்கான ஊதியம் இதர போட்டிகளுக்கு ஒரு நாளுக்கு ரூ.10 ஆயிரம் 20 ஓவர் போட்டிக்கு ரூ.5 ஆயிரம் அளிக்கப்படவுள்ளது. வீடியோ ஆய்வு நிபுணர்களுக்கான ஊதியம் 20  ஓவர் தவிர்த்த போட்டிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.15 ஆயிரம், டி-20 போட்டிகளுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து